search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு"

    உத்தர பிரதேசத்தின் கோவில் நகரமான வாரணாசியில், வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #PravasiBharatiyaDiwas #Modi
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வெளிநாடுவாழ் இந்தியர் தின (பிரவசி பாரதிய திவஸ்) மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடத்தப்படுகிறது. மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்கள் பிரவசி பாரதிய திவஸ் மாநாடு நேற்று நடைபெற்றது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

    இந்நிலையில் முக்கிய நிகழ்வான பிரவசி பாரதிய திவஸ் மாநாடு இன்று தொடங்கியது. ‘புதிய இந்தியாவை கட்டமைப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜக்நாத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



    சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

    மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு பிறகு, மோடியும், மொரிஷியஸ் பிரதமரும் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமான ஜனவரி 9ம் தேதி இந்த மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெறும் கும்பமேளாவிலும் குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க ஏதுவாக, மாநாடு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PravasiBharatiyaDiwas #Modi
    ×